எம்.பி தேர்தலில் கோவையில் போட்டி?.. கர்நாடக பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

கோவை: கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மற்றும் சேலம் மண்டல நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன்; இறையாண்மைக்கு ஆபத்து என்று யார் அழைத்தாலும் செல்வேன் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்குமாறு ராகுல்காந்தி என்னிடம் பேசினார்; கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என கூறினார். தொடர்ந்து கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, ‘நல்ல எண்ணம்தானே’ என்று பதிலளித்தார். வரும் மக்களவைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து இன்னமும் முடிவு எடுக்கவில்லை. மக்களவை தேர்தலில் நல்ல முடிவு ஏற்பட இப்போதிருந்தே வேலை செய்ய வேண்டும் என்று கூறினார்.

The post எம்.பி தேர்தலில் கோவையில் போட்டி?.. கர்நாடக பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: