அமெரிக்க அதிபர் தேர்தல் மோசடி; டிரம்ப் உள்ளிட்ட 19 பேர் மீது வழக்கு: ஆக.25க்குள் சரணடைய நீதிபதி உத்தரவு

வாஷிங்டன்: 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அதிபர் டிரம்ப் உள்ளிட்ட 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப்(77), பைடன் வெற்றிக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வந்தார். இதனிடையே 2020 அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க முயற்சி செய்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் 2020 தேர்தல் மோசடி தொடர்பாக டிரம்ப் உள்ளிட்ட 19 பேர் மீது ஜார்ஜியாவின் ஃபுல்டான் கவுண்டி நீதிமன்றத்தில் 4வது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிரம்ப், அவரது வழக்கறிஞர் ரூடி கியுலியானி, வௌ்ளை மாளிகையின் முன்னாள் தலைமை அதிகாரி மார்க் மெடோஸ், வௌ்ளை மாளிகை வழக்கறிஞர் ஜான் ஈஸ்ட்மேன் மற்றும் நீதித்துறை முன்னாள் அதிகாரி ஜெஃப்ரி கிளார்க் ஆகியோர் அடங்கிய 19 பேர் தெரிந்தே, வேண்டுமென்றே தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க முயற்சி செய்ததாக ஃபுல்டான் கவுண்டி நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிரம்ப் உள்ளிட்ட 19 பேரும் ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டுமென்று ஃபுல்டான் கவுண்டி நீதிபதி ஃபானி வில்லிஸ் உத்தரவிட்டுள்ளார்.

The post அமெரிக்க அதிபர் தேர்தல் மோசடி; டிரம்ப் உள்ளிட்ட 19 பேர் மீது வழக்கு: ஆக.25க்குள் சரணடைய நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: