புதுடெல்லி: மானியமாக வழங்கப்படும் விவசாய தர யூரியாவை பிற தொழில்களுக்கு மாற்றினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. வேம்பு பூசப்பட்ட யூரியாவானது ஒரு மூடைக்கு ரூ.266 என்ற உயர் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு உயர் மானிய விலையில் தரப்படும் யூரியாவை கால்நடை தீவனம், மண்பாண்டங்கள், பசை, ஒட்டு பலகை, மோல்டிங் பவுடர் மற்றும் சுரங்க வெடிமருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு மறைமுகமாக விற்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்துஒன்றிய அரசு எச்சாரிக்ைகையில், “விவசாய தர யூரியா பிற தொழில்களுக்கு மாற்றப்படுவதை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தொடங்கப்படும்.
தொழில்நுட்ப தர யூரியாவின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி ஆகியவற்றின் மொத்த விநியோகங்களை கண்காணிக்கும். வேளாண் தர யூரியாவின் வேம்பு பூச்சை ரசாயன வேதிபொருட்கள் மூலம் அகற்றி பிற தொழில்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்” என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
The post மானிய யூரியாவை பிற தொழில்களுக்கு மாற்றினால் சிறை: ஒன்றிய அரசு கடும் எச்சரிக்கை appeared first on Dinakaran.