தமிழ்நாட்டின் அடுத்த புரட்சி தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில் தான் இருக்கும் என அனைவருடன் கணிப்பு

சென்னை: தமிழ்நாட்டின் அடுத்த புரட்சி தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில் தான் இருக்கும் என அனைவராலும் கணிக்கப்பட்டு உள்ளது, இவ்விரு துறைகளிலும் தமிழ்நாடு ஏற்கனவே முன்னோடியாக இருக்கும் வேளையில் இத்துறையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்று மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி பாதையை இவ்விரு துறையை வைத்து உருவாக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளது. இந்திய நிலையில் இன்று தமிழ்நாட்டு முதல்வர் முக ஸ்டாலின் சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய 3 இடத்தில் மின் டைடல் பார்க் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுகிறார். இந்த 3 மாவட்ட டைடல் பார்க் சுமார் ரூ. 92.50 கோடி ரூபாயில் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இருக்கும் டைடல் பார்க் உருவாக்கியதன் மூலம் இந்தியாவில் ஐடி சேவை புரட்சிக்கு வித்திட்ட மாநிலங்களில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்தது. இந்த பாதையில் பெரு நகரங்களை தாண்டி 2ம், 3ம் தர நகரங்களில் மினி அதாவது சிறிய டைடல் பார்க்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. இது புதிதாக துவங்கும் அல்லது பிற மாநிலங்களில் இருக்கும் டெக் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய நம்பிக்கையை கொடுக்கும். மேலும் இந்த டைடல் பார்க்-கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் நம்மை அளிக்கும்.

அனைத்திற்கும் மேலாக 2ம், 3ம் தர நகரங்களில் அதிக வருமானம் அளிக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அப்பகுதி மக்களை உள்ளூரிலேயே இருக்கும் வாய்ப்பை அளிக்கும். மேலும் இப்பகுதி கல்லூரி மாணவர்களுக்கு எளிதாக வேலைவாய்ப்பை கிடைக்க வழிவகை செய்யும் என்றால் மிகையில்லை. தற்போது பெரிய ஐடி, டெக் சேவை நிறுவனங்கள் தங்களது செலவுகளை குறைக்க 2ம் மற்றும் 3ம் தர நகரங்களில் அலுவலகத்தை திறப்பதை முக்கிய பணியாக வைத்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் ரியல் எஸ்டேட் செலவுகளை குறைப்பது தான். பெரு நகரங்களில் அனைத்து நிறுவனங்களும் சொந்த அலுவலகத்தை வைத்திருக்க முடியாது, இதனால் 95 சதவீத நிறுவனங்கள் வாடகைக்கும், குத்தகைக்கும் தான் அலுவலகம் வைத்திருக்கும்.

தமிழ்நாட்டை பொருத்த வரையில் அனைத்து துறைக்கும் தகுதியான ஊழியர்களை கொண்டு உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் தமிழ்நாட்டின் கல்வித்துறை கட்டமைப்பு கடந்த 50 வருடமாக பெரிய அளவில் மேம்பட்டு வருகிறது, தொடர்ந்து முன்னேறி வருகிறது. இதை தாண்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், டீச்சர்ஸ் டிரைனிங், நர்சிங், மெடிக்கல் என அனைத்து பிரிவு கல்லூரிகளும் நிறைந்திருக்கும் காரணத்தால் அனைத்து துறை நிறுவனங்களுக்கும் போதுமான திறன்படைத்த ஊழியர்களை எந்தொரு நிறுவனமும் பெற முடியும், இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் அலுவலகங்கள் தமிழ்நாட்டுக்கு வரும் வேளையில் இதற்கான முதலீட்டு வாய்ப்பு, வர்த்தக வாய்ப்பு, வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்த டைடல் பார்க் பெரிய அளவில் பலன் அளிக்கும். 2ம் தர நகரங்களில் கோயம்புத்தூர்-ஐ தாண்டி சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூர், மதுரை, திருச்சி மாவட்டங்கள் வளர TIDEL PARK முக்கிய காரணமாக இருக்கும் தெரிவித்துள்ளனர்.

The post தமிழ்நாட்டின் அடுத்த புரட்சி தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில் தான் இருக்கும் என அனைவருடன் கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: