இந்நிலையில், திருச்சி எம்பி திருநாவுக்கரசர், தனது ஆதரவாளரான ரெக்ஸை பரிந்துரை செய்து அகில இந்திய தலைமை மூலம் அவரை திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தன்னிச்சையாக அவர் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி, முன்னாள் மாவட்ட தலைவர் ஜவஹரின் ஆதரவாளர்கள் நேற்று கட்சியின் மாவட்ட அலுவலகமான அருணாச்சல மன்றத்துக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜவஹரை மீண்டும் மாவட்ட தலைவராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கோஷமிட்டனர். ஜவஹர், ரெக்ஸ் இருவரும் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
The post திருச்சி மாவட்ட தலைவரை மாற்றிய விவகாரம் காங். ஆபீசுக்கு கட்சியினர் பூட்டு appeared first on Dinakaran.