மேலும், நிலவில் உள்ள கனிமங்களை ஆராய்ந்து சல்பர் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பதை கண்டுபிடித்தது. நிலவின் வெப்பநிலை, தரைபரப்பில் பிளாஸ்மா, நில அதிர்வு உள்ளிட்டவற்றை ஆய்வுகளை மூலம் சந்திரயான்-3 கண்டுபிடித்தது. தொடர்ந்து நிலவு நாள் முடிவடைந்து அங்கு இரவு தொடங்கி இருள் சூழ்ந்ததால் நிலவின் தென்துருவத்தில் ரோவர் மற்றும் லேண்டரின் ஆய்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டு, அவற்றை விஞ்ஞானிகள் கடந்த செப். 22ம் தேதி உறக்க நிலைக்கு கொண்டு சென்றனர். நிலவில், மீண்டும் சூரிய உதயம் ஆனது தொடர்ந்து லேண்டர் மற்றும் ரோவரில் சூரிய ஒளி பட தொடங்கியது. இதையடுத்து விக்ரம் லேண்டர் மற்றும் ரோவருக்கு தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் தற்போது வரை சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் லேண்டர் மற்றும் ரோவர் மீண்டும் செயல்படுவது கடினம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: சந்திரயான்-3 விண்கலத்தின் பணி என்பது ஒரு நிலவு நாள் மட்டுமே. அதனை வெற்றிகரமாக முடித்தது. நிலவு நாள் முடிந்த உடன் நிலவின் மேற்பரப்பு மைனஸ் 150 டிகிரி செல்ஸியஸ் கீழ் சென்று விடும் விண்கலத்தில் உள்ள இயந்திரம் மைனஸ் 30 டிகிரி செல்ஸியஸ் தாங்கக்கூடியவை.
எனவே குளிர்காற்று அதிக அளவில் நிலவில் இருக்கும், அதுமட்டுமின்றி வெயில் வந்த உடன் மீண்டும் விண்கலம் செயல்படுத்துவதற்கான கருவி பொருத்தப்பட்டு இருந்தது. ஆனால் ஒரு முயற்சிக்கு அது பொருத்தப்பட்டு இருந்தது. ஆனால் 100 சதவீதம் செயல்படும் என கூறிவிட முடியாது. நம் ஆராய்ச்சி என்பது ஒரு நிலவு நாள் மட்டுமே. இவ்வாறு அவர் கூறினார்.
The post இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் லேண்டர், ரோவரை மீண்டும் செயல்பட வைப்பது கடினம் appeared first on Dinakaran.