- முன்னாள்
- இஸ்ரோ
- நெல்லை சு.முத்து
- திருவனந்தபுரம்
- கேரளா
- நெல்லை. சு. முத்து
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- எம். சுப்பிரமணிய பிள்ளை
- எம். சொர்ணத்தம்மாள்.…
கேரளா: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமாகி உள்ளார். நெல்லை. சு. முத்து என்பவர் தமிழகத்தைச் சார்ந்த விஞ்ஞானி மற்றும் அறிவியல் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் எம். சுப்பிரமணிய பிள்ளை, தாய் பெயர் எம். சொர்ணத்தம்மாள். திருநெல்வேலியில் பிறந்த இவர் ஸ்ரீ ஹரிகோட்டா சசிஷ்தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாக இருந்து வருகிறார். மலேசியாவின் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையால் வழங்கப்பட்ட கவிமாமணி விருதினையும் பெற்றிருக்கிறார்.
இவர் அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு எனும் தலைப்புகளில் 70க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். செவ்வாயில் உள்வேட்கையும் நல்வாய்ப்பும்” என்ற தலைப்பில் செவ்வாயைப் பற்றிய கிரேக்க இதிகாச புராணக்கதைகள் மற்றும் நவீன விஞ்ஞான வாய்ப்புகளைப் பற்றியும் 2004 ஆம் ஆண்டிலேயே எழுதியுள்ளார். இவர் எழுதிய நான்கு நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்துள்ளது.
“விண்வெளி 2057″ எனும் நூல் 2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிதவியல், வானியல், இயற்பியல்,வேதியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. அறிவூட்டும் விஞ்ஞான விளையாட்டு” எனும் நூல் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. ஐன்ஸ்டீனும் அண்டவெளியும்” எனும் நூல் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. இவர், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடன் பணியாற்றியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
The post இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார்..!! appeared first on Dinakaran.
