×

இஸ்ரேலில் புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து பிரம்மாண்ட போராட்டம் : கடந்த ஓர் ஆண்டில் 100 பேர் பலியானதாக தகவல்!!

டெல் அவிவ் : இஸ்ரேலில் நீதித்துறை அதிகாரத்தை பறிக்கும் புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்தும் மக்கள் மீது அடுத்தடுத்து நடக்கும் தாக்குதலை கண்டித்தும் பொதுமக்கள் பிரம்மாண்டமான போராட்டம் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலில் உச்சநீதிமன்றத்தை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வகையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வர முனைப்பு காட்டி வருகிறார்.

நீதித்துறை நியமனங்களை அரசின் கட்டுப்பாட்டை இறுக்கமாக்கும் சட்டங்களை எதிர்த்து இஸ்ரேலில் பல கட்ட போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வரும் நிலையில், அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவில் 23வது வாரமாக பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஒன்று திரண்டு அரசுக்கு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த போராட்டத்தின் போது கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 100 பேர் உயிரிழந்திருப்பதாக குறிப்பிடும் பதாகைகளை போராட்டக்காரர்கள் வைத்து இருந்தனர். மக்களின் தொடர் போராட்டம் காரணமாக புதிய சட்டத் திருத்தத்தில் மாற்றம் கொண்டு வர இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post இஸ்ரேலில் புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து பிரம்மாண்ட போராட்டம் : கடந்த ஓர் ஆண்டில் 100 பேர் பலியானதாக தகவல்!! appeared first on Dinakaran.

Tags : Israel ,Tel Aviv ,Dinakaran ,
× RELATED போர் அமைச்சரவையை கலைத்தார் நெதன்யாகு