இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட மாணவரின் அலிகார் மற்றும் ஜார்கண்டில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அவரது வீட்டில் இருந்து மின்னணு சாதனங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஏற்படுத்துவதற்கும், அதற்கு ஆதரவளிப்போரை ஊக்குவிக்கவும், அதற்காக பல்வேறு சமூக ஊடக தளங்களில் தீவிரவாத பிரசாரத்தை ஊக்குவிப்பது தொடர்பான ஆவணங்களை வைத்திருந்தார். மேலும் சமூக ஊடக தளங்கள் மூலம் தனது கூட்டாளிகள் மற்றும் சில நபர்களுடன் சேர்ந்து குற்றவியல் சதித்திட்டத்தை தீட்டியுள்ளார். இந்த சதி திட்டமானது, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் சார்பாக இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவது முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட அமைப்புகளை வேறொரு பெயரில் இயக்குவது தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளன’ என்று கூறினர்.
The post ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு வேலை பார்த்த உ.பி பல்கலை மாணவர் கைது: முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது என்ஐஏ appeared first on Dinakaran.