இத்தகைய முக்கியவத்துவம் வாய்ந்த பணிகள் தொய்வின்றி நடைபெற மீன்வளத்துறை ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு நடத்தப்பட்டு, 65 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 7 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகதலைவர் கவுதமன், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
The post மீன்வளத்துறை ஆய்வாளர்கள் 65 பேருக்கு பணி ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.
