மஞ்சுவிரட்டில் கணவர் உயிரிழந்த சம்பவம்: இழப்பீடு கோரி ஐகோர்ட் கிளையில் மனைவி மனு

மதுரை: மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் கணவர் உயிரிழந்த சம்பவத்தில் இழப்பீடு கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனைவி மனு தாக்கல் செய்தார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நதியா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் பனங்குடியில் கடந்த ஜூலையில் நடந்த மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் தனது கணவர் உயிரிழந்ததாகவும், மஞ்சுவிரட்டு நடத்திய விழாக் குழுவினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாததே தனது கணவர் உயிரிழப்புக்கு காரணம் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அதில் கல்லல் காவல் ஆய்வாளர், காரைக்குடி வட்டாட்சியர், மஞ்சுவிரட்டு நடத்திய விழா கமிட்டி உறுப்பினர்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் சிவகங்கை ஆட்சியர் பதில் அளிக்க உத்தரவிட்ட நிலையில் வழக்கின் விசாரணையை டிசம்பர் 1 க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.

The post மஞ்சுவிரட்டில் கணவர் உயிரிழந்த சம்பவம்: இழப்பீடு கோரி ஐகோர்ட் கிளையில் மனைவி மனு appeared first on Dinakaran.

Related Stories: