அரியலூரில் இந்தியன் செஞ்சிலுவை சங்க கூட்டம்

 

அரியலூர், நவ.6:அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இந்தியன் செஞ்சிலுவை சங்க கூட்டம் நடைபெற்றது. இந்தியன் செஞ்சிலுவைச் சங்க மீட்பு மற்றும் வளர்ச்சி குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கலையரசன் தலைமை வகித்து பேசினார்.முன்னாள் செயலரும், வழக்குரைஞருமான பாஸ்கர், முன்னாள் துணைத் தலைவர் செல்வராஜ் ஆகியோர் பேசினர் நடைபெற்ற சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அரியலூரில் கடந்த அக்டோபர் மாதம் 20ம்தேதி அன்று நடைபெற்ற இந்தியன் செஞ்சிலுவைச் சங்கத் தேர்தல், சங்கவிதிகளின் படி நடைபெறவில்லை. ஆகவே அன்று நடைபெற்ற தேர்தலை ஆட்சியர் ரத்து செய்ய வேண்டும்.கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு விதிகளின்படி நடந்த தேர்தலைப் போன்று, அரியலூர் மாவட்டத்தில் முதலில் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தல் நடத்தி, அதன் பிறகு மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வை நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக தா.பழூர் ஒன்றிய உறுப்பினர் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில் முன்னாள் கொள்கை பரப்புச் செயலர் இளங்கோவன் நன்றி தெரிவித்தார்.

The post அரியலூரில் இந்தியன் செஞ்சிலுவை சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: