இந்தியாவில் ஒரு மெட்ரிக் டன் கோதுமை விலை 1.6% உயர்ந்து ரூ.27,390க்கு விற்பனை :கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவாக அதிகரிப்பு!!

டெல்லி : நாட்டில் கோதுமை விலை கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவாக 1.6% அதிகரித்துள்ளது. விழா காலத்தை ஒட்டிய அதிக தேவை, குறைந்தபட்ச விநியோகம், இறக்குமதி வரி உள்ளிட்ட காரணங்களால் கோதுமையின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. அரிசியை போன்று கோதுமையும் முதன்மை உணவாக உள்ள நிலையில், கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு கோதுமை விலை 1.6% அதிகரித்துள்ளது. நடப்பாண்டு இந்திய விவசாயிகளிடம் இருந்து 34.15 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், 26 மில்லியன் டன் கோதுமையை பெற முடிந்தது.

மேலும் ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் கோதுமையின் தேவை அதிகரித்துள்ளது. தேர்தல் நெருங்குவதால் இருப்புகளை சந்தைக்கு கொண்டு வருவதன் மூலம் கோதுமை மீதான 40% இறக்குமதி வரியை குறைப்பன் மூலமும் விலையை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன.டெல்லியில் ஒரு மெட்ரிக் டன் கோதுமையின் விலை 27,390 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தை ஒப்பிடும் போது, 22% அதிகமாகும். கோதுமை விலை மேலும் உயர்ந்தால் உணவு பணவீக்கமும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

The post இந்தியாவில் ஒரு மெட்ரிக் டன் கோதுமை விலை 1.6% உயர்ந்து ரூ.27,390க்கு விற்பனை :கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவாக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: