×

இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மசூத் அசார் பாக்.கில் இல்லை: பிலாவல் பூட்டோ சொல்கிறார்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவரும், பாகிஸ்தான் முன்னாள் வௌியுறவு அமைச்சருமான பிலாவல் பூட்டோ சர்தாரி கூறுகையில், “தீவிரவாதம் உள்பட அனைத்து பிரச்னைகள் குறித்தும் இந்தியாவுடன் விவாதிக்க பாகிஸ்தான் எப்போதும் தயாராக உள்ளது. மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் தற்போது 33 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். ஐநாவால் உலகளாவிய தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக பாகிஸ்தான் நம்புகிறது. ஆனால் அவர் இஸ்லாமாபாத்தில் இருப்பதாக இந்தியா கூறுகிறது’ என்றார்.

The post இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மசூத் அசார் பாக்.கில் இல்லை: பிலாவல் பூட்டோ சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Azhar ,India ,Pakistan ,Bilawal Bhutto ,Islamabad ,Pakistan People's Party ,Foreign Minister ,Bilawal Bhutto Zardari ,Lashkar-e-Taiba ,Mumbai terror attack ,Masood Azhar ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்