திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று அளித்த பேட்டி: அரசியல் சாசனத்தில் இந்தியாவும் இருக்கிறது, பாரதமும் இருக்கிறது. நாம் இந்தியாவையும் பயன்படுத்துகிறோம், பாரதத்தையும் பயன்படுத்துகிறோம். திடீரென்று இந்தியாமீது மோடிக்கு என்ன கோபம். எதிர்க்கட்சி கூட்டணி இந்தியா என்ற அதன் பெயரை சுருக்கி எழுதுவதால் இந்தியா மீது அவருக்கு கோபம் வந்துவிட்டது. நாளைக்கு பாரத் என்று எதிர்க்கட்சி கூட்டணி சுருக்கி வைத்தால் பாரத்தையும் மோடி மாற்றி விடுவாரா?. இது சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கை. பாரதநாடு பழம்பெரும் நாடு என்று பாரதியார் பாடியுள்ளார். பாரதம் என்பது நமக்கு விரோதம் அல்ல. ஆனால் இந்தியா மீது பிரதமருக்கு இவ்வளவு கோபம், இவ்வளவு வெறுப்பு திடீரென்று வந்ததுதான் வியப்பாக இருக்கிறது. இவ்வாறு கூறினார்.
The post ‘இந்தியா’ மீது பிரதமருக்கு திடீர் கோபம், வெறுப்பு ஏன்? ப.சிதம்பரம் கேள்வி appeared first on Dinakaran.