×

இந்தியாவில் முஸ்லிம்கள் ஐநாவில் பாக். பிரதிநிதியை மடக்கிய பத்திரிகையாளர்

நியூயார்க்: தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நிலைப்பாடு குறித்து அமெரிக்க அரசிடம் விளக்கம் அளிக்க அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ஐநாவில் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அமெரிக்க டிவி நிருபர் அகமது பாத்தி, ‘‘காஷ்மீரில் நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மூலம் முஸ்லிம்களை தீயவர்களாக சித்தரிக்க இந்தியா அரசியல் கருவியாக பயன்படுத்துவதாக நீங்கள் கூறினீர்கள். ஆனால், போர் குறித்து இந்தியாவும், பாகிஸ்தானும் ஊடகங்களுக்கு விளக்கம் அளித்ததை பார்த்தேன். அதில் இந்தியா தரப்பில் முஸ்லிம் ராணுவ அதிகாரிகள் இருந்தனர்’’ என்றார். இதனால் வெளவௌத்து போன பூட்டோ, அந்த நிருபர் அடுத்த கேள்வி கேட்கும் முன்பாக தடுத்து நிறுத்தி வழக்கம் போல் இந்தியாவை விமர்சிக்க தொடங்கி விட்டார்.

The post இந்தியாவில் முஸ்லிம்கள் ஐநாவில் பாக். பிரதிநிதியை மடக்கிய பத்திரிகையாளர் appeared first on Dinakaran.

Tags : UN ,New York ,Former ,Foreign Minister ,Bilawal Bhutto Zardari ,US government ,Pakistan ,India ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரையில் யூதர்கள்...