தமிழ்நாட்டில் வாக்கு வங்கியை அதிகரிக்கும் பாஜகவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. பாஜக 4 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வெளியான நிலையில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கட்சியின் முன்னணி நிர்வாகிகள், கூட்டணி தலைவர்களை களமிறக்கியும் பாஜகவால் ஒரு இடத்தையும் வெல்ல முடியவில்லை. தெலுங்கானா புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிட்ட தமிழசையும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
இந்தியாவை கூறுபோட நினைத்த பாஜகவிற்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். கூட்டணி ஆட்சியமைக்க மோடி நினைக்கிறார். ஆனால் அது ஒரு போதும் நடக்காது. பாஜகவிற்கு வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. பாஜகவை மக்கள் நிராகரித்துள்ளனர்.பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க துடிக்கிறார் மோடி.
எங்கெல்லாம் வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் வாக்கு இயந்திரத்தை வைத்து பாஜக விளையாடியுள்ளது. அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. “யார் ஆளக்கூடாது என மக்கள் முடிவு செய்துவிட்டனர். “தமிழ்நாட்டில் பாமகவின் வாக்கு வங்கியால் தான் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. மக்கள் நலனுக்காக மோடியை சந்திரபாபு நாயுடு நிராகரிக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
The post இந்தியாவை கூறுபோட நினைத்த பாஜகவிற்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.