×

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு: 3வது முறையாக சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜூன் 14ம் தேதி அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். உடல் நலக் குறைவு காரணமாக அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் பிற்பகல், மருத்துவமனைக்குச் சென்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு அவரை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. சிகிச்சை முடிந்த பிறகு ஜூலை 17ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்று முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

The post சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு: 3வது முறையாக சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Chennai Sessions Court ,Chennai ,Minister Senthil Balaji ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில்...