×

இளங்கோவடிகளுக்கு வரும் 24ம் தேதி மரியாதை

சென்னை: இளங்கோவடிகள் தந்துள்ள சிலப்பதிகாரம் ‘முத்தமிழ்க்காப்பியம்’ எனப் பெயர்பெற்றது. தமிழ், இயல் – இசை – நாடகம் என்ற மூன்று கூறுகளைக் கொண்டது என்பது சிலப்பதிகாரத்தின் மூலம் தான் முதன்முதலில் உலகுக்கு அறிமுகமானது. அதற்கும் பின்னர் தான் ‘முத்தமிழ்’ என்னும் சொல் புலவர் உலகில் வழக்கிற்கு வந்தது. இத்தகைய சிறப்பு மிக்க இளங்கோவடிகளைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் ஏப்ரல் 24ம் நாளன்று சென்னை அண்ணா சதுக்கத்திலுள்ள இளங்கோவடிகள் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், வரும் 24ம் தேதி காலை 9.30 மணிக்கு இளங்கோவடிகள் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள், பொது மக்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

The post இளங்கோவடிகளுக்கு வரும் 24ம் தேதி மரியாதை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Khutamilukkaparam ,Ackrons ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...