சென்னை ஐ.ஐ.டி யில் புதிய பாடப் பிரிவு தொடக்கம்: 4 ஆண்டுகால மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்பு..!!

சென்னை: சென்னை ஐ.ஐ.டி யில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை எனும் 4 ஆண்டுகால புதிய பாடத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் காக்னிசென்ட் இணை நிறுவனர் லக்ஷ்மி நாராயணன் மற்றும் ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி ஆகியோர் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை எனும் 4 ஆண்டு கால புதிய பட பிரிவை தொடங்கிவைத்தனர்.

மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்த தேவையான திறன்களுடன் வின்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை தயார்படுத்துவதே இப்பிரிவின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இது நான்கு ஆண்டுகால படிப்பு ஜூலை மாதம் நடைபெறும் நுழைவு தேர்வு மூலம் இப்படிப்பில் சேரலாம் என்றும் இதற்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளதாகவும் காமகோடி தெரிவித்தார். புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துரையின் கீழ் 5 பட திட்டங்கள் அறிமுக படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

The post சென்னை ஐ.ஐ.டி யில் புதிய பாடப் பிரிவு தொடக்கம்: 4 ஆண்டுகால மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: