மேலும் டிஜிட்டல் நீரூற்றுகள், அலங்கார கம்பங்கள், தெற்கு விளக்குகள் போன்றவையும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.இதனிடையே டெல்லியில் உள்ள குடிசை பகுதியில் தடுப்பு மூலம் மறைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் குஜராத் வந்த போதும் இதே போல குடிசைகள் மறைக்கப்பட்டு இருந்தன. அதை போலவே டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சர்வதேச தலைவர்கள் தங்கும் ஹோட்டல்கள் வரை குடிசை பகுதிகளை மறைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குடிசைகள் பச்சை நிறத்திலான மிக நீளமான திரை சீலைகள் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது.
The post ஜி20 நாட்டுத் தலைவர்கள் கண்களில் குடிசைகள் படக்கூடாதா ?..குடிசைகளை மறைத்து நீண்ட திரைச் சீலைகளை கட்டிய அவலம்!! appeared first on Dinakaran.