இளம் வாக்காளர்கள், விடுபட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வீடு,வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும் மயிலாடுதுறையில் அலுவலர்களுக்கு, சிறப்பு பார்வையாளர் உத்தரவு மயிலாடுதுறை, இரண்டு நாள் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பெயர் சேர்க்க 3301 பேர் விண்ணப்பம் செய்துள்ள நிலையில் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள், விடுபட்டவர்களை வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மயிலாடுதுறையில் அலுவலர்களுக்கு, வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குசாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமைவாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளரும், வேளாண்மைதுறை ஆணையருமான சுப்பிரமணியன், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மகாபாரதி முன்னிலையில் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
The post வீடு,வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள் appeared first on Dinakaran.