×

ஓசூர் அருகே கெலவரப்பள்ளியில் அணையில் தொடர்ந்து நுரை பொங்குவதால் விவசாயிகள் அதிர்ச்சி..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தில் தொடர்ந்து நுரைகள் பொங்குவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஓசூரை அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்கத்திற்க்கு வினாடிக்கு 473 கனஅடி நீர் வரத்து உள்ளது. அந்த நீர் 3 மதகுகள் வழியாக தென்பண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையில் இருந்து வெளியேற்றப்படும் தென்பெண்ணை ஆற்று நீரில் குவியல் குவியலாக நுரை பொங்கி காணப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதோடு கால்நடைகள் நீரை குடித்தால் நோய்கள் வர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் ரசாயன கழிவுகளை ஆற்றில் கலப்பதை வழக்கமாக கொண்டு இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஓசூர் அருகே கெலவரப்பள்ளியில் அணையில் தொடர்ந்து நுரை பொங்குவதால் விவசாயிகள் அதிர்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : Kelavarappalli ,Osur Krishnagiri ,Krishnagiri district ,Osur ,
× RELATED மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மேலும் ஒரு நாதக பிரமுகர் கைது