சென்னை: மருத்துவமனைகளில் கண்டிப்பாக ஒரு காவல்துறை மையம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப் பணி இயக்குநர் ராஜமூர்த்தி சுற்றிக்கை அனுப்பியுள்ளார். மேற்குவங்கத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து மருத்துவத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவமனையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய திட்டத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமல்படுத்தியது. நாட்டில் உள்ள மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகள் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந்தது. தமிழ்நாட்டில் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் 2 முறை நடந்த ஆலோசனையில் புதிய நடைமுறைகள் சுற்றறிக்கை மூலம் அனுப்பப்பட்டுள்ளன. மருத்துவமனை பணியாளர்களின் பாதுகாப்புக்காக ஆலோசனை மற்றும் பாதுகாப்பு என 2 கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும். மருத்துவமனை வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
The post மருத்துவமனைகளில் காவல்துறை மையம் அமைக்க வேண்டும்: சுகாதாரத்துறை appeared first on Dinakaran.