சிம்லா: இமாச்சலில் ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72ஆக அதிகரித்துள்ளது. இதனால் சம்மர் ஹில், கிருஷ்ணாநகர், பாக்லி பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவினால் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் சடலங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றது. பலி எண்ணிக்கை நேற்று முன்தினம் 57 ஆக இருந்த நிலையில் நேற்று சிவன் கோயில் இடிபாடுகளில் இருந்து மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. சிம்லாவில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
The post இமாச்சலில் நிலச்சரிவு பலி எண்ணிக்கை 72 ஆனது appeared first on Dinakaran.