உயர்கல்வி செல்வோருக்கு வழிகாட்ட குழு அமைப்பு

சென்னை: உயர்கல்வியில் சேர உள்ள மாணவர்களுக்கு வழிகாட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் குழு அமைத்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் 3123 அரசு மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டல், ஆலோசனை வழங்கல், தொடர்பாக பள்ளி அளவில் உயர்கல்வி வழிகாட்டல் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் அரசு மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது, உயர்கல்வி செல்வதற்கான ஆலேசனைகள் வழங்குதல் போன்ற பணிகளுக்கான இந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் செல்ல இருக்கின்றனர். அவர்களுக்கு சான்றுகள் வழங்க வேண்டியுள்ளது, அவர்களின் உணவு மற்றும் போக்குவரத்து செலவினத்துக்காக நாள் ஒன்றுக்கு ஒரு மாணவருக்கு ரூ.100 வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

The post உயர்கல்வி செல்வோருக்கு வழிகாட்ட குழு அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: