அரசு ஒதுக்கும் இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்க செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்

சென்னை: அரசு ஒதுக்கும் இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்க செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்வது தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது.

விஜயகாந்துக்கு அவரது நிலத்திலேயே அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது, அதேபோல அனுமதி வழங்க வேண்டும். புதிய இடத்தில் அடக்கம் செய்வது தொடர்பாக அரசிடம் புதிய மனு அளிக்க வேண்டும். விண்ணப்பத்தை அரசு பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்

நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, இறந்த நபர் நல்ல முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும். உடலை பள்ளியில் வைத்திருக்க முடியாது, நாளை பள்ளி திறக்க வேண்டும், மாணவர்கள் பள்ளி வர வேண்டும்.

அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டதால் இந்த வழக்கு செல்லாததாகி விட்டது. பெரம்பூரில் மனுதாரர் தெரிவிக்கும் 7,500 சதுர அடி நிலமும் குடியிருப்பு பகுதி தான், அதில் எப்படி அனுமதி வழங்க முடியும். குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம்; ஒதுக்குபுறமாக விசாலமான இடத்தை தேர்ந்தெடுங்கள்; நல்ல இடத்தில் மணிமண்டபம் அமைக்கலாம் என்று நீதிபதி கூறியுள்ளார். மீண்டும் வழக்கு மதியம் 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

 

The post அரசு ஒதுக்கும் இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்க செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: