ஹீரோ மோட்டார் சைக்கிள் நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த ஜீரோ மோட்டார் சைக்கிளுடன் இணைந்து புதிய எலக்ட்ரிக் பைக்கை சந்தைப்படுத்த உள்ளது. இதற்காக ஜீரோ மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் ரூ.490 கோடி முதலீடு செய்வதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது. பிரீமியம் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளாக அல்ட்ராவயலட் எப்77 பைக் இந்தியச் சந்தையில் உள்ளது.
இதற்கு போட்டியாக அதிக திறன் கொண்ட எலக்ட்ரிக் பைக்காக ஜீரோ மோட்டார் சைக்கிள் வெளிவர உள்ளது. எப்போது சந்தைப்படுத்தப்படும் என்ற விவரம் வெளியாகவில்லை. ஜீரோ எலக்ட்ரிக் பைக்குகளில் பிரபலமான ஒன்றான ஜீரோ எஸ்ஆர்/எஸ் அதிகபட்சமாக 110 எச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக் கூடியது. 17.3 கிலோவாட் பேட்டரி இடம் பெற்றிருக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக சுமார் 300 கிமீ தூரம் வரை செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஜீரோ மோட்டார் சைக்கிள் appeared first on Dinakaran.