×

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார்: கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

ராஞ்சி: ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. தேர்தலில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி 56 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. ஜேஎம்எம் 34 இடங்களும், காங்கிரஸ் 16, ராஷ்டிரிய ஜனதாதளம் 4, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 2 இடங்களை பெற்றன. தேசிய ஜனநாயக கூட்டணி 24 இடங்களில் வெற்றி பெற்றது. பர்ஹைட் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஹேமந்த் சோரன் 39 ஆயிரத்து 791 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தியா கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து மாநில ஆளுநர் சந்தோஷ்குமார் கங்க்வாரை ஹேமந்த் சோரன் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதை ஏற்று கொண்ட ஆளுநர் ஆட்சி அமைக்க வருமாறு சோரனுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில்,ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்கும் விழா இன்று மாலை 4 மணிக்கு மொரபாதி மைதானத்தில் நடக்கிறது. இந்த விழாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி,மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சரத் பவார்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,மேகாலயா முதல்வர் கான்ட்ராட் சங்மா,பஞ்சாப் முதல்வர் பக்வந்த் சிங் மான்,இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, சிபிஐ(எம்எல்) பொது செயலாளர் தீபாங்கர் பட்டாச்சார்யா, ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால், சிவசேனா(உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே,அகிலேஷ் யாதவ் எம்பி, பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

ஹேமந்த் சோரன் நேற்று தனது மனைவியுடன் ராம்கர் மாவட்டம், நெம்ரா கிராமத்துக்கு சென்று அவரது தாத்தா சோபரன் சோரனின் உருவ படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் கூறுகையில், நாளை(இன்று) முதல் எங்கள் அரசின் ஆட்சி மீண்டும் தொடங்குகிறது. இதில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார்.

The post ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார்: கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Hemant Soran ,Jharkhand ,Chief Minister ,Kharge ,Rahul Gandhi ,India ,Ranchi ,JMM ,Congress ,Rashtriya Janata Dal ,Marxist ,Leninist ,Kharke ,India Alliance ,Dinakaran ,
× RELATED ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் ஒரு...