சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மோட்டார் வாகனச் சட்டம் 470-ன்படி, அங்கீகார கடிதத்தின் அடிப்படையில் பதிவு சான்று, தகுதி சான்று வழங்கும் பழைய நடைமுறை தொடர வேண்டுமென்றும், புதிதாக பதிவு சான்றிதழ் பெறும் வாகனங்களுக்கு பி ரிஜிஸ்டர் மூலம் அனுமதி வழங்கும் பழைய நடைமுறை பின்பற்றப்பட வேண்டுமென்றும் மாநில லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, புதிதாக பதிவு செய்யும் வாகனங்களுக்கான பதிவு சான்று மற்றும் கனரக வாகனங்களுக்கான தகுதி சான்று ஆகியவற்றை அங்கீகார கடிதத்தின் அடிப்படையில் வழங்கவும், புதிதாக பதிவு சான்றிதழ் பெறும் வாகனங்களுக்கு பி ரிஜிஸ்டர் மூலம் அந்த வாகனத்திற்கான அனுமதியை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post கன ரக வாகனங்களுக்கான பதிவு சான்றிதழை கடிதம் மூலம் வழங்க ஓபிஎஸ் கோரிக்கை appeared first on Dinakaran.