உதம்சிங் நகர்: உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழைக்கு மத்தியில் நீரில் மூழ்கிய வீடுகளில் சிக்கியிருந்த 60 பேரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்து வரும் கனமழையால், பல மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர் தேங்கிய பகுதியில் வசிப்பவர்கள், அருகிலுள்ள உள்ளூர் தொடக்கப்பள்ளியில் தங்குமிட வசதி செய்யப்பட்டுள்ளது. உத்தம் சிங் நகரில் பெய்த கனமழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் வசிக்கும் குடும்பத்தினரில் சுமார் 70க்கும் மேற்பட்டோர், தங்களது வீடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்த மீட்புக் குழுவினர் நேற்றிரவு முதல் போராடி, நீரில் மூழ்கிய வீடுகளில் சிக்கியிருந்த 60 பேரை, கட்டுமரங்கள் மூலம் மீட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் யாரேனும் வீடுகளில் சிக்கியுள்ளனாரா? என்பது குறித்து மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
The post உத்தரகாண்டில் கனமழை நீரில் மூழ்கிய வீடுகளில் சிக்கியிருந்த 60 பேர் மீட்பு appeared first on Dinakaran.