×

கனமழை காரணமாக கேரள மாநில வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலச்சரிவுகள்.. 8 பேர் இதுவரை உயிரிழப்பு!

வயநாடு: கேரள மாநில வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை என்ற இடங்களில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு பெய்த கனமழையால் அதிகாலையில் 2 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலரது நிலை என்னவென்று தெரியாததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இன்று அதிகாலை 1 மணிக்கு முண்டக்கை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதனை அடுத்து 3 மணி நேரத்தில் சூரல் மலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அட்டமலையில் இருந்து முண்டகை சென்றடைவதற்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. கடைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

வயநாடு, நிலச்சரிவு தொடர்பாக அவசர உதவிக்கு 9656938689, 8086010833 -ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க கோவை சூலூரிலிருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது. சூலூரில் இருந்டு 2 விமானப்படை ஹெலிகாப்டர்கள் உள்பட 3 ஹெலிகாப்டர்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அரக்கோணத்திலிருந்து கேரளா சென்றிருந்த பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

The post கனமழை காரணமாக கேரள மாநில வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலச்சரிவுகள்.. 8 பேர் இதுவரை உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Wayanadu ,Mundakai ,Suralmalai ,
× RELATED கடைசி ஆதரவையும் இழந்த பெண்ணுக்கு மம்மூட்டி ஆறுதல்