×

கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!!

சென்னை: கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 5.435 டிஎம்சி (46.22%) நீர் இருப்பு உள்ளது.

*புழல் ஏரிக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 46 கனஅடியாக இருந்த நிலையில் இன்று 672 கனஅடியாக உயர்ந்துள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2349 மில்லியன் கன அடியாக உள்ளது.

*கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 650 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில், 2198 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது.

*சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்த நிலையில் இன்று 36 கனஅடி நீர்வரத்து உயர்ந்தது.1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 117 மில்லியன் கன அடியாக உள்ளது.

*பூண்டி ஏரிக்கு 290 கனஅடியும், வீராணம் ஏரிக்கு 321 கனஅடியும் நீர்வரத்து உள்ளது.

* 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 301 மில்லியன் கன அடியாக உள்ளது.

The post கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...