வெறுப்புணர்வும், பிரிவினையும் நம்மை ஆட்கொள்ள அனுமதிக்கக் கூடாது: ஹரியானா கலவரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்

சென்னை: ஹரியானாவில் நடந்த மத வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக மனமிரங்குகிறேன். அமைதி, அகிம்சை, நல்லிணக்கத்துடன் வாழ்தல் ஆகியவற்றில்தான் உண்மையான வலிமை உறைந்துள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.வெறுப்புணர்வும், பிரிவினையும் நம்மை ஆட்கொள்ள அனுமதிக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் டிவிட்டர் பதிவில்:
ஹரியானா மாநிலத்தில் அண்மையில் நடந்த மத வன்முறையில் பாதிக்கப்பட்டு, பெரும் வேதனைக்கும் கடுந்துயருக்கும் ஆளாக்கப்பட்டுள்ளோருக்காகவும் அவர்களின் குடும்பத்தினருக்காகவும் மனமிரங்குகிறேன். அமைதி, அகிம்சை, நல்லிணக்கத்துடன் வாழ்தல் ஆகியவற்றில்தான் உண்மையான வலிமை உறைந்துள்ளது என்பதை நாம்நினைவில்கொள்ள வேண்டும். வெறுப்புணர்வும் பிரிவினையும் நம்மை ஆட்கொள்ள நாம் அனுமதிக்கக் கூடாது.

கலவரக்காரர்கள் எந்தத் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, விரைவில் இயல்புநிலை திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதைத் தக்க முறையில் உறுதிசெய்திட வேண்டும் என்றும் ஹரியானா அரசினை நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

The post வெறுப்புணர்வும், பிரிவினையும் நம்மை ஆட்கொள்ள அனுமதிக்கக் கூடாது: ஹரியானா கலவரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட் appeared first on Dinakaran.

Related Stories: