தொடர்ந்து அவர் எந்த மாநிலத்திலாவது கவர்னர் பதவி காலியானால் தனக்கு பதவி கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்து இருந்தார். இந்த நிலையில் கட்சியின் சீனியராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கவர்னர் பதவி வழங்கப்பட்டது. அப்போதும் எச்.ராஜா ஏமாற்றத்துக்கு ஆளானார். அதே நேரத்தில் மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பொறுப்பாளர் பதவி உள்ளதால் அவர் கட்சி பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தனக்கு எந்த பொறுப்பும் இல்லாதால் தன்னால் கட்சி பணியையும், மக்கள் பணியையும் ஆற்ற முடியவில்லையே என்று கடும் வருத்தத்தில் இருந்து வந்தார் எச்.ராஜா. இந்த நிலையில் ஒடிசா, திரிபுரா போன்ற மாநிலங்களுக்கான கவர்னர் பதவி காலியானது. இதிலாவது தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எச்.ராஜா எதிர்ப்பார்த்து இருந்தார்.
இந்த நிலையில் எச்.ராஜாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் 2 மாநிலங்களுக்கான புதிய கவர்னர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். அதிலும் எச்.ராஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அவர் ஏமாற்றத்துடன் இருந்து வருகிறார். கவர்னர் பதவி என்பது ஓய்வு பணி தான். பெரிதாக எந்த பணியும் இருக்காது. இருந்தாலும் அந்த பதவி கவுரவமாக கருதப்படுகிறது. கவர்னர் பதவி கிடைத்தால் தனக்கு ஒரு கவுவரம் ஏற்படும் என்று எச்.ராஜா எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார். கட்சியிலும் எந்த பொறுப்பும் இல்லாதநிலையில் கவர்னர் பதவியும் வழங்கப்படாததால் எச்.ராஜாவும் அவரது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
The post கவர்னர் பதவி வழங்காததால் எச்.ராஜா கடும் அதிருப்தி appeared first on Dinakaran.