இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், www.trb.com என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி ஓஎம்ஆர் சீட் முறைப்படி நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்பட கூடிய 2,171 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பள்ளிகளில் 23 காலி பணியிடங்களும், ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் செயல்பட கூடிய பள்ளிகளில் 16 காலி இடங்களும், மாற்றுத்திறனாளி நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 12 காலி இடங்களும் என மொத்தம் 2,222 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு என்பது வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்- 394, ஆங்கிலம்- 252, கணிதம்- 233 மற்றும் இயற்பியல்-292 பணியிடங்களுக்கு தேர்வானது நடைபெறும். ஆசிரியர் பணி பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றும் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முற்றிலும் தகுதி அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனங்கள் நடைபெறும் என்றும் ஆசிரியர் தீர்வு வாரியம் அறிவித்துள்ளது.
The post 2,222 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஜனவரி 7ல் தேர்வு.. நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!! appeared first on Dinakaran.