கீழே இறங்காவிட்டால் போலீசை கூப்பிடுவோம் என்று டிரைவர் வந்து கூறினார். போலீஸ் வந்தா பயந்து விடுவோமா, உனக்கு தைரியம் இருந்தால் போலீசை கூப்பிடு என்று அவரிடமும் அந்த நபர் தகராறில் ஈடுபட்டார். இவரது ரவுசு தாங்க முடியாமல் கண்டக்டர், வெளிப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து அவரை பஸ்சை விட்டு கீழே இறக்கி விசாரித்தனர். இதில் அவர், நாகை அக்கரைப்பேட்டை டாடா நகரை சேர்ந்த சவுந்தர்ராஜன் என்பதும், ஃபுல் போதையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஒரு ஆட்டோவை வரவழைத்து அதில் சவுந்தரராஜனை ஏற்ற முயன்றனர்.
ஆனால் அவர் ஆட்டோவில் ஏற மறுத்து, ஆட்டோவின் பக்கவாட்டில் இருந்த ரெக்சின் சீட்டை கிழித்தார். இதனால் ஆளை விட்டா போதும் என டிரைவர் ஆட்டோவை எடுத்துச்சென்று விட்டார். பின்னர் வேறுவழியின்றி 2 போலீசார் சவுந்தரராஜனை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு 100 மீ தொலைவில் உள்ள வெளிப்பாளையம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். காவல் நிலையத்திலும் போலீசாரிடம் சவுந்தர்ராஜன் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து போதையில் பயணிகளுக்கு இடையூறு செய்ததாக போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்தனர். பின்னர் உறவினர்களை வரவழைத்து எச்சரிக்கை விடுத்து அவரை அனுப்பி வைத்தனர்.
The post அரசு பஸ்சில் ரவுசு காட்டிய போதை ஆசாமி; ஆட்டோவில் ஏற்ற மறுத்து டிரைவர் ஓட்டம் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்: நாகையில் பரபரப்பு appeared first on Dinakaran.