தமிழக அரசைப் பின் தொடர்ந்து கேரளாவிலும் உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்கை அரசு மரியாதையுடன் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை அரசிடம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. பின்னர் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்த பிறகு இது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று கேரள அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் உடல் உறுப்புகளை தானம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் சினிமா நடிகர், நடிகைகள் உள்பட சமூகத்தில் பிரபலமானவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கேரள அரசு தீர்மானித்துள்ளது.
The post தமிழக அரசை பின்பற்றி நடவடிக்கை உறுப்புதானம் செய்பவர்களுக்கு அரசுமரியாதை இறுதிச்சடங்கு: கேரள அரசு திட்டம் appeared first on Dinakaran.