The post ஆளுநருக்கு திருமாவளவன் கேள்வி பூணூல் அணியாதவர்கள் இழிவானவர்களா? appeared first on Dinakaran.
ஆளுநருக்கு திருமாவளவன் கேள்வி பூணூல் அணியாதவர்கள் இழிவானவர்களா?

சென்னை: பூணூல் அணியாதவர்கள் இழிவானவர்களா என்று ஆளுநருக்கு திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: நந்தனார் பிறந்த ஆதனூரில் 100 பறையர்களுக்கு பூணூல் அணிவிக்காறாராம் ஆளுநர் சனாதனி ரவி. இது மேன்மைப்படுத்துகிறோம் என்னும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவுப் படுத்துவதாகும். இதுதான் சனாதனம் ஆகும். இதன்மூலம் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர். பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களை கோயில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர். அத்துடன் ஆளுநர், நந்தன் வழிபட்டதால் நடராசர் கோயிலில் அடைக்கப்பட்டுள்ள சுவரைத் தகர்த்து வாசலைத் திறந்து விட வேண்டுகிறோம். நாடாண்ட மன்னன் நந்தனை மாடுதின்னும் புலையன் என இழிவுப்படுத்தும் பெரிய புராணக் கட்டுக்கதைகளைப் புறந்தள்ளுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.