இந்த நிலையில், நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம், மீன்வள பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், தமிழ்நாடு அண்ணா தெரசா மகளிர் பல்கலைக்கழகம் திருத்த மசோதா ஆகிய 10 மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் ஆளுநர் அனுப்பியுள்ள மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.ஏற்கனவே ஆளுநர் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை உடனடியாக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்தது ஸ்டாலின் அரசு.நீட் விவகாரத்தில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட்டது போலவே தற்போது மீண்டும் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்படுகிறது.
The post 10 மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்… நவ.18ல் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட தமிழக அரசு முடிவு!! appeared first on Dinakaran.