தமிழ்நாட்டில் ஆளுநரும் பாஜவும் சேர்ந்து கலவரத்தை ஏற்படுத்த முயற்சி: நெல்லை முபாரக் பேட்டி

திருப்பூர்: தமிழ்நாட்டில் பாஜவும், ஆளுநரும் கூட்டு சேர்ந்து கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாக எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறினார். திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று அளித்த பேட்டி: இந்தியா கூட்டணியில் பாசிச, பாஜ அரசை எதிர்க்கின்ற அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். மணிப்பூரை போன்று, அரியானா, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் நடைபெறும் வன்முறையை தடுக்க தவறிய ஒன்றிய அரசும், மோடியும், அமித்ஷாவும் பதவி விலக வேண்டும்.

பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிற யாத்திரை, ரத்த யாத்திரையாக, கலவர யாத்திரையாக மாறுவதற்கு முன்பு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் பாஜவும், ஆளுநரும் கூட்டு சேர்ந்து கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜ ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாது. அதற்கான பணியை முன் நின்று எஸ்டிபிஐ கட்சி மேற்கொள்ளும். சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுகிற என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறையினருக்கு தமிழ்நாடு அரசு கடிவாளம் போட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post தமிழ்நாட்டில் ஆளுநரும் பாஜவும் சேர்ந்து கலவரத்தை ஏற்படுத்த முயற்சி: நெல்லை முபாரக் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: