×

பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். இதுதொடர்பான வழக்கில் ஆளுநரின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும், மாநில அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த 10 மசோதாக்களில் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் மசோதாவும் அடங்கும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஆளுநரின் ஒப்புதல் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சட்ட மசோதாக்கள் சட்டமானதாக அரசிதழில் தமிழக அரசு அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மேலும், 2 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதில் ஒன்று தனியார் பல்கலை தொடர்பான திருத்தச் சட்ட மசோதாவகும். இது தனலெட்சுமி னிவாசா பல்கலை உள்ளிட்ட 8 தனியார் பல்கலைகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கிறது. இதற்கான சட்டப்பேரவை ஒப்புதல் ஏற்கனவே பெறப்பட்டு ஏப்ரல் 11ம் தேதி அன்று அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 2வது பொதுத்துறையின் கீழ் கட்டிட உரிமை வழங்குவது தொடர்பான 2024 சட்டமாகும். இது கட்டிடங்களுக்கு உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை ஒழுங்குபடுத்துகிறது.

The post பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Governor ,Chennai ,R.N. Ravi ,Tamil Nadu Legislative Assembly ,Supreme Court ,
× RELATED பயண அட்டை தொலைந்துபோனால் இருப்பு...