×

அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்கள் முன்வைக்கும் மிக முக்கியமான பிரதான கோரிக்கை. காலிப்பணியிடங்களை நிரப்புவதிலும் மெத்தனப்போக்கு நிலவுவதாக அரசு ஊழியர்கள் சங்கங்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. எனவே தேர்தல் வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், சரண் விடுப்பு உள்ளிட்டவற்றை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Government ,Kalib ,SDBI party ,Chennai ,State President ,Nella Mubarak ,SDBI ,Dinakaran ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உறை...