அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிப்பு

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக இருந்த சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணவர்கள் சேர்க்கையானது, அந்தந்த கல்லூரிகளில் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் நடத்தப்பட்டது. இருப்பினும், சில அரசு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் சில பாடப்பிரிவுகளில் காலியாக உள்ளன. எனவே, இது வரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று முதல் 14ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் TNGASA2023-UG VACANCY”- என்ற தொகுப்பில் காணலாம்.

The post அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: