×

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட மீனவர்களின் 33 படகுகளுக்கு ரூ.1.23 கோடி நிவாரணம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு, தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களின் 33 படகுகளுக்கு ரூ.1.23 கோடி நிவாரணம் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிம்நாடு மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம் வழங்குவதில் விடுபட்டு போன 21 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் மற்றும் 12 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் 33 படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1.23 கோடி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

The post இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட மீனவர்களின் 33 படகுகளுக்கு ரூ.1.23 கோடி நிவாரணம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Government of Sri Lanka ,Chennai ,Tamil Nadu ,Sri Lankan Navy ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...