அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்ததால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி குற்றச்சாட்டு!

புனே : அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்ததால்தான் கோப்புகள் விரைவாக நகர்கின்றன என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி குற்றச்சாட்டியுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புனே பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது; லஞ்சம் கொடுத்தால் அதிகாரிகள் வேகமாக பணியாற்றுகின்றனர். இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது. ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை என்ற நியூட்டனின் விதி போல் அரசு அதிகாரிகள் செயல்படுகின்றனர்.

சாலை விபத்துகள், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு நெடுஞ்சாலை திட்டங்களுக்கான தவறான திட்ட அறிக்கைகள் காரணமாக உள்ளன. நமது அமைப்பில் ஏராளமான விஞ்ஞானி நியூட்டனின் தந்தையர்கள் உள்ளனர். ஆவணங்கள் மேல் லஞ்சம் வைத்தால் அது வேகமாக நகரும். நமது நாட்டில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். பொதுப் பணித்துறைகளில் பணிகளை விரைந்து முடிக்க காலக்கெடு அவசியம். மற்றும் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் முடிவு எடுக்கும் முறை கொண்டு வர வேண்டும். தற்போது நடப்பதில் இருந்து இளைஞர்கள் பாடம் கற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்ததால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி குற்றச்சாட்டு! appeared first on Dinakaran.

Related Stories: