நெல்லிக்காய் தக்காளி சூப்

தேவையானவை:

கொட்டை நீக்கிய நெல்லிக்காய் – 1/2 கப்,
தக்காளி – 1(அரிந்தது),
இஞ்சி துருவல் – 1,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி – 2 டீஸ்பூன்.

செய்முறை:

நெல்லிக்காய், தக்காளி, இஞ்சி துருவல், உப்பு சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும். பாத்திரத்தில் 2 டம்ளர் நீர் விட்டு அரைத்த விழுதினை சேர்த்து கொதிக்க விடவும். பின்பு மிளகு, சீரகத்தூள், கொத்தமல்லி சேர்த்து இளம் சூடாக பருகவும். இதனை சாதத்திலும் கரைத்து குடிக்கலாம். நல்ல புத்துணர்ச்சி தரும்.

 

The post நெல்லிக்காய் தக்காளி சூப் appeared first on Dinakaran.