×

மீண்டும் சர்ரென குறைந்தது தங்கம் விலை: சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.46,520க்கு விற்பனை


சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.46,520க்கு விற்கப்படுகிறது. இஸ்ரேல், ஹமாஸ் போர் உருவானதை தொடர்ந்து தங்கம் விலை அதிரடியாக உயர தொடங்கியது. மேலும் அதிரடியாக உயர்ந்தால், சில தினங்களுக்கு பிறகு பெயரளவுக்கு குறைவதுமாகவும் இருந்து வந்தது. அதே நேரத்தில் தீபாவளி பண்டிகை நேரத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. இதனால் தங்கம் விற்பனையும் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்து காணப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது. சில நேரத்தில் பெயரளவுக்கு குறைவதுமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு கிராம் ரூ.5975-க்கும், சவரன் ரூ. 47,800-க்கும் விற்பனையானது. நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.1000 குறைந்து ரூ.46,800க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.5,850க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று காலை சவரனுக்கு ரூ. 280 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ. 35 குறைந்து ரூ. 5,815-க்கு விற்பனையாகி வருகின்றது. சவரன் ரூ. 46,520-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை நேற்றைவிட 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.81-க்கும், ஒரு கிலோ ரூ. 81,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post மீண்டும் சர்ரென குறைந்தது தங்கம் விலை: சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.46,520க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Savaran ,CHENNAI ,Israel ,Hamas ,Sawaran ,Dinakaran ,
× RELATED ஏமனில் இருந்து இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்