தீபாவளி போனஸ் தொகையை தங்கத்தில் முதலீடு செய்ய பலரும் திட்டமிட்டுள்ளனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை தந்துள்ளது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,515க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசு குறைந்து ரூ.76.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post மீண்டும் சர்ரென குறைந்த தங்கம் விலை.. 4 நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்தது: நகை பிரியர்கள் மகிழ்ச்சி..! appeared first on Dinakaran.