பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி: ராமதாஸ் நேரில் நலம் விசாரிப்பு

சென்னை: பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதாவது தொண்டை வலி, தலைவலி, தலைச்சுற்று ஆகியவற்றால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தொண்டை குரல் வளையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஜி.கே.மணிக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று அறுவை சிகிச்சை நடந்தது.

அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு முன்பாக ஜி.கே.மணியை, பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இது குறித்து மருத்துவர் பாபு மனோகரனிடம், ஜி.கே.மணிக்கு மேற்கொள்ளப்படவிருக்கும் சிகிச்சை குறித்து ராமதாஸ் கேட்டறிந்தார்.

The post பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி: ராமதாஸ் நேரில் நலம் விசாரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: